search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stagnant areas"

    • தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.
    • அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அந்தியூர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்து வெயிலின் தாக்க த்தை குறைத்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    குறிப்பாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், பூக்கடை கார்னர் பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நின்றும் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.

    இது குறித்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் அந்தப் பகுதி மக்கள் தொலைபேசி மூலம் கூறினர். இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் குண சேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சிவலிங்கம் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வர வழைத்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்

    மேலும் தூய்மை பணி யாளர்கள் மூலம் மழை நீர் வடிகாலில் உள்ள அடை ப்புகளை சரி செய்து மழை நீர் வடிகாலில் செல்லும் வகையில் சரி செய்யப் பட்டது.

    குறுகலாக இருப்பதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழை நீர் வரும்போது அடைப்பு ஏற்பட்டு மழை நீர்ஆனது சாலையிலே தேங்கிநிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த மழைநீர் வடிகால் அங்கு அகலம் படுத்தும் படி அதி காரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். அதனை சரி செய்வதாக அந்த பகுதி மக்களிடம் எடுத்து கூறி தண்ணீரை சரி செய்த பின்னரே அந்த இடத்தில் இருந்து எம்.எல்.ஏ. சென்றார்.

    அப்போது அந்தப் பகுதி சேர்ந்த முத்து, நேரு, ஜிவா, செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

    ×