என் மலர்
நீங்கள் தேடியது "SSLC Examination"
- சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 342 மாணவிகளில் 329 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- சாதனை படைத்த மாணவிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தலைமை ஆசிரியர் மணிமேகலை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 342 மாணவிகளில் 329 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 96 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் பாடகமுத்து 469 மதிப்பெண்களும், மஞ்சு 466 மதிப்பெண்களும், பர்வதவர்த்தினி 465 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடத்தை பிடித்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுமான ராஜா மற்றும் தலைமை ஆசிரியர் மணிமேகலை, ஆசிரிய, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி அமைந்து 2-ம் ஆண்டு முடிவில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் பொது தேர்வில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு முதல்-அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அழகனூரில் உள்ள எச்.வி.எச். பள்ளியில், 10-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில், கணித பாட தேர்வின்போது மாணவர்களுக்கு விடைத்தாளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்து காப்பியடிக்க உதவி உள்ளனர்.
ஆசிரியர்களே விடைகள் எழுதுவதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் எச்.வி.எச். பள்ளியின் துணை முதல்வர் மகதும், ஆசிரியர்கள் கபாசி, பாட்டீல், பாலையா ஆகியோர் விடைகளை எழுதி மாணவர்களுக்கு வினியோகித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர். #ExamIrregularities






