என் மலர்
நீங்கள் தேடியது "Srivaigundam Court"
- மாயாண்டி மீது போலீஸ் நிலையத்தில் ஆடு, மாடு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- தெய்வகண்ணனுக்கும், மாயாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் சுடலை கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் மீது செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஆடு, மாடு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கொலை
இதுதொடர்பான வழக்கு களை கால்வாய் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வக்கீல் தெய்வகண்ணன் (39) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டுக்கு விசாரணைக்காக மாயாண்டி வந்தார். அப்போது அவ ருக்கும் தெய்வ கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதற்கிடையே நேற்று மாலை வீட்டில் இருந்த மாயாண்டியை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதைதடுக்க வந்த அவரது மனைவி செல்விக்கும் வெட்டு விழுந்தது.
6 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக ஸ்ரீவை குண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக கொலை செய்யப் பட்டார்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளி மாயாண்டி கொலை தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகின்றனர்.






