என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Balaji saravanan"

    • சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    • கொலை வழக்கில் 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் இறந்த நபரையும் சம்மந்தப்பட்ட எதிரியையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா,நீதிமன்ற சம்மன் சார்பு பணியில் ஒரே மாதத்தில் 78 சம்மன்களை சார்பு செய்த முதல் நிலை காவலர் வேல்முருகன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2009-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்ட்ட 2 எதிரிகளை திறம்பட கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் ஞானமுத்து ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், சிப்காட் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்மந்தப்பட எதிரிகள் 2 பேரை கைது செய்யவும், எதிரிகளிடமிருந்து ஒரு பவுன் நகையை கைப்பற்றவும் உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், முறப்பநாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ், சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க செயினை பறித்து சென்ற எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படையை சேர்ந்த தலைமை காவலர் . மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மகாலிங்கம், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன் . முத்துப்பாண்டி ஆகியோர் உட்பட8 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 74 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.

    • ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
    • காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எஸ்.பி. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் மாவட்ட காவல்துறையினருக்கான ஒருநாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    இதனை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணன் குத்து விளக் கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி பேசினார்.

    அப்போது கூறுகையில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம்" என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது தாயின் கடமையாகும்.

    ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனை வரும் உணர வேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பாட்டாலே நல்ல சமுதாயத்தை உரு வாக்க முடியும். பாலின பாகுபாடு கூடாது.

    தற்போது சமுதாயத்தில் பல துறைகளில் பெண்கள் சாதித்து உயரிய பதவிகளில் உள்ளனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை யினர் மூலம் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர் களிடையே தொடர்ந்து மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பெண்கள் பாதிக் கப்பட்டு போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளிக்க வந்தால், அவர்களை காவல் துறையினராகிய நீங்கள் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து சட்டப்படி தீர்த்து வைக்க உதவ வேண்டும்.

    காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணை யில் ஈடு படும்போது அவர்களிடம் அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவாகவும், பண்புடனும் நடந்து கொள்வது மிக முக்கியமான தாகும்.

    எனவே காவல்துறை யினராகிய நீங்கள் இந்த பயிலரங்கத்தை பயன் படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் இதுசம்மந்தமாக சமூகநலன் மற்றும் உரிமைத் துறைக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் மாவட்ட காவல்துறை வழங்கும் என்றும் கூறினார்

    அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ், மாவட்ட காவல்துறையினருக்கு பெண்குழந்தைகள் பாது காப்பு குறித்தும், பெண் கல்வியினை ஊக்கு வித்தல், படிப்பை இடை நிறுத்திய பெண் குழந்தை களை கண்டறிந்து மீண்டும் கல்வி பயிலவும், ஊக்கு வித்து உதவுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) திலகா, ஒருங் கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, வழிகாட்டி செயல் அலுவலர் வீரலெட்சுமி உட்பட உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    • காவலர் வீரவணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை யில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியா கத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் நங்கை யர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் சுரேஷ்,மணியாச்சி லோ கேஷ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்தி குளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள், இன்ஸ்பெக்டர் தூத்து க்குடி தென்பாகம் ராஜாராம், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மாரியம்மாள், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு மயிலேறும்பெரு மாள், மத்திய பாகம் அய்யப்பன், உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    ×