என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ்.பி. பாலாஜி சரவணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.
எஸ்.பி.பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி - 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது
- காவலர் வீரவணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை யில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியா கத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் நங்கை யர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் சுரேஷ்,மணியாச்சி லோ கேஷ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்தி குளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள், இன்ஸ்பெக்டர் தூத்து க்குடி தென்பாகம் ராஜாராம், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மாரியம்மாள், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு மயிலேறும்பெரு மாள், மத்திய பாகம் அய்யப்பன், உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.






