search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Indian Baniyan Manufacturers Association"

    • 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா சங்கம் செயல்படுகிறது.
    • 29ந் தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    திருப்பூர் :

    உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா எனப்படும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் செயல்படுகிறது.இச்சங்கத்தில் ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.தேர்தல் நடத்தி மட்டுமே 2022 -25க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஒருதரப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கடந்த 10ந் தேதி கூடிய சைமாவின் அவசர செயற்குழுவில் வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.வருகிற 29ந்தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    நாளை 19-ந்தேதி முதல் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் வேட்பு மனு வழங்கப்படுகிறது.மனு தாக்கலுக்கு 21ந் தேதி கடைசிநாள். 25-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டு, 26-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.போட்டி உள்ள பதவிகளுக்கு மட்டும் 29ந் தேதி சைமா அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் நடத்தப்படும்.

    வேட்பு மனு பூர்த்தி செய்து 2 நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். ஒரு நகலில் தேர்தல் அதிகாரியின் ஒப்புகை பெற்றுக்கொள்ளவேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்பவர், முன்மொழிபவர், வழிமொழிபவர்கள் சங்கத்துக்கு எந்த நிலுவை தொகையும் வைத்திருக்க கூடாது. புதிய உறுப்பினர் எனில் சந்தா தொகை செலுத்திய நாளில் இருந்து ஓராண்டு உறுப்பினராக இருத்தல் வேண்டும். சங்க ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது.ஒருநபர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிடமுடியும். போட்டி இல்லாத பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுபவரும், வேட்பு மனு கட்டணம் செலுத்த வேண்டும்.தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சைமா சங்க தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.  

    ×