என் மலர்
நீங்கள் தேடியது "South Africa President"
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
பிரிட்டோரியா:
தென்னாப்பிரிக்க நாட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, சிரில் ராமபோசா (வயது 66) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் கூறினார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி இன்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராமபோசா, ஊழலை ஒழிக்கவும், தடுமாறும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார்.
குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #CyrilRamaphosa #RepublicDay
புதுடெல்லி:
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார்.

இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருந்ததாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிரில் ரமாபோசா தெரிவித்தார். #CyrilRamaphosa #RepublicDay
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த சிரில் ரமாபோசா பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மைத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றும் மூன்றாண்டுகால ஒப்பந்தம் இந்த ஆலோசனையின்போது கையொப்பமானது.
இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருந்ததாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிரில் ரமாபோசா தெரிவித்தார். #CyrilRamaphosa #RepublicDay