என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggled gravel"

    • அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில் கிராவல் மண் இருந்தது தெரிந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓசைபட்டி பகுதியில் மண் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசைப்பட்டியில் ஈரோடு மாவட்ட தனி வருவாய் ஆய்வாளர் சாமுவேல் ராஜ் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி வந்த லாரியை ஓசைப்பட்டி என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில் கிராவல் மண் இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஒரிச்சேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பதும், லாரியில் கிராவல் மண் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் லாரியையும், மணிகண்டனையும் ஆப்ப க்கூடல் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    ×