என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வஸ்திக் சிகாரா"

    • பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத், லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது.
    • இறுதியில் ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது ஏலதாரர் மல்லிகா சாகர் சில தவறுகளை செய்துள்ளார். இது அணி உரிமையாளர்களை சற்று வேதனையடைய செய்துள்ளது.

    அந்த வகையில் டெல்லி அணி ஏலத்தைக் கவனிக்காததால் உத்தரபிரதேச பேட்டர் ஸ்வஸ்திக் சிகாராவை ஆர்சிபிக்கு ஏலதாரர் விற்றார். உடனே டெல்லி நிர்வாகம் நாங்கள் துடுப்பை உயர்த்தினோம் என கூறினார். ஆனால் அதற்கு ஏற்கனவே ஆர்சிபி-க்கு விற்று விற்றதாக கூறி மன்னிப்பு கேட்டார். இதனால் டெல்லி அணி அதிருப்தி அடைந்தது.

    இதனை தொடர்ந்து ஜாஸ் பட்லரை ஏலத்தில் விற்கும் போதும் சில தவறுகளை செய்ததால் குஜராத் அணிக்கு ரூ. 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியில் ரூ.15.50 கோடிக்கு குஜராத் ஏலம் எடுத்தது. அதை ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்க விரும்புகிறீர்களா என லக்னோ அணியிடம் கேட்டார். உடனே லக்னோ மறுத்து விட்டது. இதனையடுத்து ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணிக்கு விற்றது.

    குஜராத் ரூ.15.50 கோடிக்கு கடைசியாக ஏலம் எடுத்தது. ஆனால் ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு விற்றது. இதனால் அந்த அணி 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஏலதாரர் மல்லிகா சாகர் மீது இது குறித்து எதிர்ப்புகளை அணி நிர்வாகிகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×