என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரீபியன் பிரிமியர் லீக்"

    • கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசினார் பொல்லார்டு.
    • இந்தியாவின் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் அடித்துள்ளார்.

    செயின்ட்லூசியா:

    வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 13-வது சீசன் நடந்து வருகிறது.

    செயின்ட்லூசியாவில் நடந்த போட்டியில் டிரிபாகோ அணி, செயின்ட்லூசியா அணியை சந்தித்தது. முதலில் ஆடிய டிரிபாகோ 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய செயின்ட் லுசியா 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன் வித்தியாசத்தில் டிரிபாகோ அணி வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் 29 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் விளாசிய டிரிபாகோ அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசிய 2-வது வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்டு.

    பொல்லார்டு இதுவரை 128 போட்டியில் 203 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.

    ஏற்கனவே செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் எவின் லீவிஸ் 200 சிக்சர் அடித்திருந்தார்.

    ஒட்டுமொத்த டி 20 லீக் வரலாற்றில் இரு அணிகள் சார்பில் தலா 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் பொல்லார்டு. இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் (189 போட்டி) அடித்துள்ளார்.

    ஒட்டுமொத்த டி 20 வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு (14,562 ரன், 1056 சிக்சர்) பிறகு அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரரானார் பொல்லார்டு (13,181 ரன், 941 சிக்சர்).

    கெயில் 1056 சிக்சர்கள் உள்பட 14,562 ரன்கள் குவித்துள்ளார். இவரை தொடர்ந்து பொல்லார்டு 941 சிக்சர் உள்பட 13181 ரன்கள் அடித்துள்ளார்.

    • கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லூசியா கிங்ஸ் வீழ்த்தியது.
    • கரீபியன் பிரிமியர் லீக் கோப்பையை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதல் முறையாக வென்றது.

    கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அணியையும் வீழ்த்தி அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம், தொடர் முழுதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டி முடிவில் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கோப்பையை வாங்கி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை கோப்பையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொண்டாடியதைப் போலவே ஃபாஃப் டு பிளெசிஸும் சிபிஎல் கோப்பையை வென்ற பிறகு கொண்டாடினார். 

    ×