என் மலர்
நீங்கள் தேடியது "நீட் பிரச்சனை"
- நீட் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு.
- ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றதைவிட முக்கியத்துவம் பெறுகிறது- ரிஜிஜு.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நீட் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் இன்று கையில் எடுத்தன. இது தொடர்பாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துளளார்.
இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறுகையில் "எந்தவொரு விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையிலான காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை சிறந்தது அல்ல. நாடாளுமன்ற மரபுகளை காங்கிரஸ் மீறும் விதத்தை நான் கண்டிக்கிறேன்.
ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றதைவிட முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், காங்கிரஸ் மக்களவை கண்ணியத்திற்கு எதிராக இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்புகிறது. நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் வேண்டாம். மற்ற பிரச்சனைகள் முதலில் ஆலோசிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.
நாங்கள் நீட் தொடர்பான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அது விதிப்படை நடைபெற வேண்டும். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெறும். இந்த தீர்மானத்தின்போது உறுப்பினர்கள் அவர்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.
இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.