search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமா ரமணன்"

    • உமா ரமணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.

    'நிழல்கள்' படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் உமா ரமணன் (69). மேலும் இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார்.

    பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர் இசையிலும் பாடி உள்ளார். இருந்த போதிலும் இளையராஜா இசையில் 100 - க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார்.



    சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.இதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்த அவர் நேற்று இரவு 9 அவரது இல்லத்தில் காலமானார்.




    உமா ரமணன் 1000 க்கும் மேற்பட்ட மேடை கச்சேரியில் கணவர் ரமணனுடன் இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.



    அவரது மறைவுக்கு இசை ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    உமா ரமணன் பாடிய சில சூப்பர் ஹிட் பாடல்கள் வருமாறு :- பூங்கதவே தாழ் திறவாய்... - (நிழல்கள் படம் ) ஆனந்த ராகம்... - (பன்னீர் புஷ்பங்கள்)




    பூபாளம் இசைக்கும்... (தூரல் நின்னு போச்சு)

    செவ்வந்தி பூக்களில் செய்த வீடு... (மெல்ல பேசுங்கள்) கஸ்தூரி மானே... (புதுமைப் பெண்)

    நீ பாதி நான் பாதி... (கேளடி கண்மணி)

    ஆகாய வெண்ணிலாவே... (அரங்கேற்ற வேளை)

    பொன் மானே கோபம் ஏனோ... (ஒரு கைதியின் டைரி) கண்மணி நீ வர காத்திருந்தேன் (தென்றலே என்னை தொடு) ராக்கோழி கூவையில... (ஒரு தாயின் சபதம்) ஏலேழம் குயிலே... (பாண்டி நாட்டு தங்கம்)




    பூத்து பூத்து குலுங்குதடி... (கும்பக்கரை தங்கையா)

    பூங்காற்று இங்கே வந்து... (வால்டர் வெற்றிவேல்)

    வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... - (நந்தவன தேரு)

    கண்ணும் கண்ணும் தான்... ( திருப்பாச்சி)




    உமா ரமணன் மறைவை யொட்டி அவரது கணவர் ரமணன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது :-

    எனது மனைவி உமா ரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில் இறைவனடி சென்றார். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை.

    இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, இது உமா ரமணனின் ஆசை என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    மனைவியை இழந்து வாடும் ரமணனுக்கு ஆழ்ந்த இரங்கல், மற்றும் ஆறுதலை இணைய தளத்தின் வாயிலாக ஏராளமானோர் தெரிவித்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் உமா ரமணன் பாடகியாக அறிமுகமானார்.
    • உமா ரமணன் மறைவால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் இருந்தார்.

    இந்நிலையில், உமா ரமணன் நேற்று காலமானார். அவரது மறைவால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார்.

    கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×