என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவ்வாழைப்பழம்"

    • வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
    • சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

    கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

    இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் குணமாகும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.

    செவ்வாழையில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

    சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.

    பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

    சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.

    • தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி செவ்வாழை பழத்திற்கு இருக்கிறது.
    • செவ்வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஏனைய வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகின்றது.

    தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

    சிவப்பு நிற வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.

    பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டியாக மாறிவிடும்.

    செவ்வாழைப் பழத்தை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் செவ்வாழைப் பழத்திற்கு இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப் பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது.

    நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

    குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு இவ்வாறு சாப்பிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

    • அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன.
    • மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.

    சத்துகள் நிறைந்த பழமாக செவ்வாழைப்பழம் உள்ளது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிட்டும். அவை பற்றி பார்ப்போம்...

    தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம். மற்ற பழங்களை விட செவ்வாழையில் குறைவான கலோரி அளவு மற்றும் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதே காரணமாகும்.

    செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால், சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.

    அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

    ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடியில் பொடுகு நீங்குவதுடன், வறட்சியும் குறைகிறது.

    மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மூலத்தை குணப்படுத்த உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.

    புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில், செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் உதவுகிறது.

    ×