என் மலர்
நீங்கள் தேடியது "முன்னாள் பாஜக நிர்வாகி"
- பாலியல் புகாரில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
- தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரன் 4 நாட்களுக்கு பிறகு கைது.
பழனி அருகே புஷ்பத்தூரில் லை உணவு திட்ட பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், முன்னாள் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புஷ்பத்தூர் ஊராட்சி தலைவரின் கணவரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான மகுடீஸ்வரன் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரன் 4 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகுடீஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளராக இருந்த மகுடீஸ்வரன் பாலியல் புகாரில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






