என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணையன் தட்சிணாமூர்த்தி"
- “தி பிளாக் ஹில்” நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
- சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.
சென்னை:
"தி பிளாக் ஹில்" நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட "தி பிளாக் ஹில்" நாவலைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட The Black Hill நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான @sahityaakademi விருது பெறும் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுகள்.… pic.twitter.com/DYKBRtBxPQ
— M.K.Stalin (@mkstalin) March 12, 2024
- 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
- இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது
இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
அதில் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி என்பவர் மமாங் தய் எழுதிய the black hill என்ற நாவலை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார்.
மேலும், கண்ணையன் தட்சிணாமூர்த்தி பல்வேறு மொழிலில் இருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி , புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.