என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலாங்கரை போலீசார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    இந்நிலையில் எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள நீலாங்கரை மகளிர் போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
    • அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    என மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டாகிறது. அவர் திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.

    மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

    ×