என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல் தாக்கி காயம்"

    • மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • ரவிகிரண் படுகாயம் அடைந்து சுய நினைவை இழந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11 ), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் அருகில் உள்ள மாம்பழத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரவிகிரண் படுகாயம் அடைந்து சுய நினைவை இழந்தார். அருகில் இருந்தவர்கள் ரவிக்கிரனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதேபோல் காமிரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவரது நண்பர் மகேஷ். இருவரும் நேற்று ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இடி தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    • கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வருகிற 3-ந்தேதி இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று கோழிக்கோடு மாவட்டம் இடச்சேரி பகுதியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 20 பேரில், 8 பேர் மின்னல் தாக்கி காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடி-மின்னல் இருக்கும் போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ×