என் மலர்
நீங்கள் தேடியது "பெற்றோர் தினம்"
- கே.ஜி., குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
- பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நடனமாடியும், பாடியும், மிமிக்ரி செய்தும் பலவிதமான திறமைகளை காட்டி குடும்பமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கே.ஜி., குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். பெற்றோர்கள், குழந்தைகள், முக்கிய பிரமுகர்கள் விளக்கேற்ற ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நடனமாடியும், பாடியும், மிமிக்ரி செய்தும் பலவிதமான திறமைகளை காட்டி குடும்பமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
லக்கி லிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன் ஆகியோர் பரிசுகள் வழங்க கவுரவித்தனர்.
முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.






