என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாட்ஜிடிபி"
- ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது
- கூகுள் நிறுவனமும் டீப்மைண்ட் செயலியை உருவாக்கியுள்ளது
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. கூகுள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 'டீப்மைண்ட்'ஐ உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்.
'ஏஐ' குறித்து பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை "மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது "பேயை வரவழைப்பது போன்றது" என்றும் கூறியிருந்தார்.
தற்போது 'எக்ஸ்ஏஐ' நிறுவனத்தை குறித்து மஸ்க், "சாட்ஜிபிடி அரசியல் ரீதியாக சார்புநிலை கொண்ட பொறுப்பற்றது. ஆனால் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பதிலளிப்பதுமாகும்" என கூறியிருக்கிறார்.
இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஏஐ (AI) என்பது தொற்றுநோய் மற்றும் அணுஆயுத போருக்கு இணையான ஆபத்து என்று எச்சரித்தவரும், பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் 'ஏஐ' பாதுகாப்பு மையத்தை வழிநடத்துபவருமான டான் ஹென்ட்ரிக்ஸ் எக்ஸ்ஏஐ குழுவிற்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.
2015-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மஸ்க், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் விரைவாக செயல்படுத்த துடிக்கும் வகையில் பொறுப்பற்று செயல்படுவதாக கூறியிருந்தார். பின்னர், டெஸ்லாவில் கவனம் செலுத்துவதற்காக 2018-ல் ஓப்பன்ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் "ட்ரூத்ஜிபிடி" (TruthGPT) எனும் புதிய செயலிக்கான தனது திட்டங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்ட மஸ்க், "மக்களுக்கு 3-வதாக செயலியை உருவாக்குவேன் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஏஐ-ல் என்விடியா (Nvidia) எனும் கலிபோர்னியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஜிபியு (GPU) எனப்படும் மிகவும் விலையுயர்ந்த ஸெமிகண்டக்டர்கள் மிக அவசியம்.
ஓபன்ஏஐ அல்லது கூகுள் டீப்மைண்ட் போன்ற ஒரு ஏஐ நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கு பெரிதும் அவை தேவைப்படுவதால் மஸ்க்கின் இந்த ஏஐ ஆர்வத்தை மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் ஒரு முயற்சியாக மென்பொருள் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்