என் மலர்
நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சி குழு"
- தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பியது.
- வெளிநாடு சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதை தடுத்திட மத்திய அரசு தி.மு.க,வின் கனிமொழி, காங்.கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது.
மத்திய அரசு அமைத்த 7 குழுக்களில் 4 குழுக்களில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். மற்ற 3 குழுக்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் இடம்பெற்றனர்.
உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுவினரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். உலக நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
- மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
- இதில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.
புதுடெல்லி:
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமென அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் உள்துறை தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
மேலும், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங்கை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தன.






