என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் தாக்குதல்"

    • போலீசார் விரைந்து வந்து பெண் டாக்டரை தாக்கிய நபரை கைது செய்தனர்.
    • அவர் படுகாயங்களுடன் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொட்டாரக்கரா தாலுகா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற போதை நபர் தாக்கியதில் பெண் டாக்டர் வந்தனா தாஸ் என்பவர் பலியானார்.

    இந்த சம்பவத்திற்கு பிறகு அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இங்கு சிகிச்சைக்கு செல்லும் போதை நபர்கள் டாக்டர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

    நேற்று முன்தினம் அதிகாலை தலச்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு சென்றார். அவரை அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் அம்ரிதா ராகி பரிசோதித்தார்.

    அப்போது அந்த வாலிபர் தனது மார்பில் வலிப்பதாக கூறியுள்ளார். அவரை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வாலிபர் திடீரென டாக்டரின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த டாக்டர் அம்ரிதா ராகி, ஆஸ்பத்திரி நிர்வாகிகளிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண் டாக்டரை தாக்கிய நபரை கைது செய்தனர். அவரது பெயர் மகேஷ். கைதான அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர் படுகாயங்களுடன் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    • குடிபோதையில் இருந்த ஷைஜூ, திடீரென தனக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார்.
    • அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் அஞ்சலி புகார் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா தகழி பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. சம்பவத்தன்று இவர் தனது நெற்றியில் எற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அஞ்சலி என்ற பெண் மருத்துவர், சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது குடிபோதையில் இருந்த ஷைஜூ, திடீரென தனக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் அஞ்சலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஷைஜூவை கைது செய்தனர்.

    ×