என் மலர்
நீங்கள் தேடியது "11ம் வகுப்பு"
- மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி உறுதி செய்யப்படும். நடப்பு கல்வியாண்டே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதால் மாணவர்களின் அழுத்தம் குறையும். மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வாய்ப்பாக இருக்கும் என்ற கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் கல்வித்துறை யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






