என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க. கொண்டாட்டம்"
- எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தருமபுரி,
2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தருமபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் மாவட்ட அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனையடுத்து தருமபுரி நான்குரோடு அண்ணா சிலை முன்பும், பேருந்து நிலையத்திலும் நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி ஒன்றிய செயலாளர் நீலபுரம் செல்வம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பு எதிரொலியாக நடந்தது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வெளியிட்டது தொடர்ந்து ராணிப்பேட்டை முத்துகடை பஸ் நிறுத்தத்தில் நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோல் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நகர செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மேளதாளம் முழுக்க பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷாபூதின், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் பூங்காவனம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனுசாமி, நகர அவைதலைவர்கள் மணி, குமரன் வாலாஜா ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, நகர மன்ற உறுப்பினர்கள் முரளி, சுரேஷ், ஜோதி சேதுராமன், ராணிப்பேட்டை நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது உமர் பாரூக் உள்பட மாவட்ட நகர ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






