என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    அ.தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய போது எடுத்த படம். 

    அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    தருமபுரி,

    2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனையடுத்து தருமபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் மாவட்ட அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    அதனையடுத்து தருமபுரி நான்குரோடு அண்ணா சிலை முன்பும், பேருந்து நிலையத்திலும் நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி ஒன்றிய செயலாளர் நீலபுரம் செல்வம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×