என் மலர்
நீங்கள் தேடியது "வெற்றிவேலாயுதசாமி கோவில்"
- திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.
- திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.
வெற்றிவேலாயுதசுவாமி கோவிலுக்குப் பின்புறம் மேற்கே சற்றுத்தள்ளி தனிக் கோவிலாக வள்ளி-தெய்வானை கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை போருக்கு சென்று வதம் செய்த பிறகு தனிமையில் இருந்தார்.
அவரை மணம் முடிக்க விரும்பிய வள்ளி- தெய்வானை இருவரும் இம்மலைக்கு வந்து, முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரன் மகளாகத் தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இது திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.
எனவே இங்கு திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.
- காலை கணபதி ஹோமம், கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறும்.
- இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மிகவும் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றம் நாளை (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கணபதி ஹோமம், கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறும். மலைக்கோவிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து மாலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த மாதம் 1-ந் தேதி மாலை சுவாமி மயில் வாகன காட்சி உலா நடைபெறும்.
அடுத்த மாதம் 4-ந் தேதி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறும். 5-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். 6-ந் தேதி பரிவேட்டை நடைபெறும். 7-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.
அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.அன்று இரவு மஹா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.அடுத்த மாதம் 9-ந் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.
- தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.
ஊத்துக்குளி :
கொங்கு வளநாட்டின் குறும்பு நாடாகிய பதியினில் இயற்கை எழில்வளம் நிறைந்த ஊத்துக்குளியில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது வெற்றி வேலாயுதசாமி எனும் திருப்பெயருடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இங்கு தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் கீழ் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மகா தீபாராதனை அதனைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6:30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நேற்று பரிவேட்டை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி தெப்ப உற்சவ காட்சி நடைபெறும்.
நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.






