வள்ளி தெய்வானைக்கு தனிக்கோவில்

திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.
வள்ளி தெய்வானைக்கு தனிக்கோவில்
Published on

வெற்றிவேலாயுதசுவாமி கோவிலுக்குப் பின்புறம் மேற்கே சற்றுத்தள்ளி தனிக் கோவிலாக வள்ளி-தெய்வானை கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை போருக்கு சென்று வதம் செய்த பிறகு தனிமையில் இருந்தார்.

அவரை மணம் முடிக்க விரும்பிய வள்ளி- தெய்வானை இருவரும் இம்மலைக்கு வந்து, முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரன் மகளாகத் தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இது திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.

எனவே இங்கு திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com