என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்சப்புகார்"
- நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
- காவல் ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெபபோலியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியுள்ளார்.
இதனால், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டிய நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் புகாரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
- பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.
- சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும்
அவினாசி :
அவினாசி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நில அளவீடு, பெயர் மாற்றம், உள்ளிட்ட பணிகளுக்கு சென்றால் , நில அளவீடு செய்வதற்கு சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அவர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி மாவட்ட கலெக்டர் எஸ்.வினித் இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நில அளவையாளர் மோகன்பாபுவை நீலகிரி மாவட்டம் குந்தா வட்டத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.






