என் மலர்
நீங்கள் தேடியது "திமுக பேச்சாளர்"
- சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது.
தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆளுநர், குஷ்புவை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
சென்னை:
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அவர் மீது கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் எஸ்.பிரன்னா ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரும்படி தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
இந்நிலையில், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.






