என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன்"

    • கட்டிடம் கட்டி கொண்டிருப்பவர்களுக்கும், இனி கட்டிடம் கட்ட உள்ளவர்களுக்கும் இந்த கண்காட்சி மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.
    • ஜனவரி 2-ந் தேதி வரைகாலை 10 மணி முதல் இரவு8 மணி வரை 4 நாட்கள்நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன்சார்பில் 17-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி திருப்பூர்-தாராபுரம்ரோடு, வித்யாகார்த்தி திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.

    விழாவுக்கு சங்கத் தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை தாங்கினார். செயலாளர்ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கண்காட்சித்தலைவர் துரைசாமி விழாஅறிக்கை வாசித்தார்.அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொறியியல் பொக்கிஷம் 2022-23கண்காட்சி மலரை திருப்பூர் எம்.பி., சுப்பராயன் வெளியிட்டார் அதனை சங்கத்தின் பட்டயத்தலைவர் சிதம்பரம் பெற்றுக்கொண்டார். குறிப்பேட்டை மேயர் தினேஷ்குமார் வெளியிட்டார் அதனை சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் தில்லைராஜன்பெற்றுக்கொண்டார். சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சான்றிதழை துணைமேயர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். இதை சங்க முன்னாள் மாநில பொருளாளர் ரமேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிடப்பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் ரவி சங்கத்தின் உறுப்பினர் அடையாளஅட்டையை வழங்கினார்.இதை முன்னாள் மாநிலபொருளாளர் பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.

    கண்காட்சியில் தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான பொருட்கள்தயாரிப்பிலும், விற்பனையிலும் சிறந்து விளங்கும் 200நிறுவனங்களின் அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன.கட்டிடம் கட்டி கொண்டிருப்பவர்களுக்கும், இனி கட்டிடம் கட்ட உள்ளவர்களுக்கும் இந்த கண்காட்சி மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளான கட்டுமான பொருட்கள், அதி நவீன பாதுகாப்பு கருவிகள், அனைத்து வகையான வீடு கட்டுமான பொருட்களையும் ஒரே இடத்தில் தேர்வு செய்யும் விதமாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

     இந்த கண்காட்சிஜனவரி 2-ந் தேதி வரைகாலை 10 மணி முதல் இரவு8 மணி வரை 4 நாட்கள்நடைபெறுகிறது. கண்காட்சியில் தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.கண்காட்சிக்கான அனுமதிஇலவசம். மேலும் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள்யுனானி மருத்துவ சிகிச்சைமற்றும் ஆலோசனை முகாம்,ஜனவரி 1-ந் தேதி இலவசகண் சிகிச்சை முகாம், 1,2 ஆகிய தேதிகளில் இலவச ரத்த அழுத்தம், இசிஜிபரிசோதனை முகாம் நடக்கிறது.செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பழனிச்சாமி, கண்காட்சிசெயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாரதிராஜா, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்ஜெயராமன், துணைச் செயலாளர் ராஜசேகரன், துணைபொருளாளர் மகேஷ்குமார்,தகவல் தொடர்பாளர் நாகராஜ், கண்காட்சி மலர்குழுதலைவர் சம்பத்குமார்மற்றும் கண்காட்சி குழுவினர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    ×