என் மலர்
நீங்கள் தேடியது "பூக்கள் விலை சரிவு"
- கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது
- சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வருகிறார்கள். இதுபோல் விவசாயிகளிடம் இருந்தும் வியாபாரிகள் வாங்கி வந்தும் விற்பனை செய்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விற்பனையாகாத பூக்களை ஆங்காங்கே கொட்டி வரும் அவலம் நடந்து வருகிறது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது முகூர்த்த தினம் , கோவில் நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் பூக்களின் தேவை குறைவாக உள்ளது. ஆனால் வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
இருப்பினும் விற்பனையாகாத பூக்களை மீண்டும் கொண்டு சென்றால் அதற்கான வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகம் ஆகும். மீண்டும் இந்த பூக்களை விற்பனை செய்ய முடியாததால் சந்தையிலேயே குப்பையில் கொட்டி செல்கிறோம் என்றனர்.
- கடந்த 15 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது.
- தற்போது பண்டிகை காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
சேலம்:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று கிலோவுக்கு ரூ.800 வரை விலை குறைந்து ரூ.280 என விற்கப்பட்டு வருகிறது.
அதே போல ரூ.600- க்கு விற்ற முல்லை பூ ரூ.500 வரை விலை குறைந்து இன்று ரூ.240 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) : -
மல்லிகை-ரூ.280, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.80, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.40, சாதா சம்மங்கி - ரூ.40, அரளி - ரூ.160, வெள்ளை அரளி - ரூ.160, மஞ்சள் அரளி - ரூ.160, செவ்வரளி - ரூ.180, ஐ.செவ்வரளி - ரூ.180, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நடந்து வரும் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் முடிந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தை மாதம் பிறந்ததும் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.






