என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகம் திறப்பு"

    • புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜகுமாரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி : 

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 10 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக ஊத்துக்குளியில் புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனி அம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ,திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜகுமாரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
    • 15 வார்டு செயலாளர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் பேரூராட்சி தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கம்பைநல்லூர் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் மோகன் தலைமை வகித்தார்.

    இவ்விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் இ.மாசிலாமணி, மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் செங்கண்ணன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன்,முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கிருஷ்ணன், எஸ். கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் இனிப்புகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கீதா ஜெயக்குமார்,நந்தினி திருமால், கீதா சேகர்,விஜயலட்சுமி சுரேஷ் மற்றும் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு செயலாளர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.

    ×