என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய ஆற்றல்"

    • சோலார் சக்தி மூலம் பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    • காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிவருகிறார்.

    இந்நிலையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்துகிறது.

    இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம். நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை சோலார் எரிசக்தி எவ்வாறு மாற்றுகிறது என்பதும் ஆய்வுப் பொருளாகும். சோலார் சக்தி மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார். இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு என எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை.

    இதேபோல் சூரிய சக்தி மூலம் பலர் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகம்

    ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

    சில தினங்களுக்கு முன் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா நிலைநிறுத்தியது. இந்த சாதனை இந்தியாவிற்கு தீபாவளி பரிசாக அமைந்தது. இந்திய இளைஞர்களுக்காக விண்வெளித்துறை வாய்ப்புகள் திறக்கப்பட்டதும், புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன. டிஜிட்டல் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.

    • மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை மண்டல கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார்.
    • வங்கிக்கடன் பெறவும் வசதி செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அவிநாசி:

    மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருப்பூர் வட்டத்தின் சார்பில் மத்திய திறனாக்க செயலகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கான மின்திறன் மேலாண்மை, மின் சிக்கன மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அவிநாசியில் வழங்கப்பட்டது.அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி வரவேற்றார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை மண்டல கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார்.

    ஏற்கனவே இலவச மின்சார விவசாய மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் கூடுதலாக 11கிலோ வாட் சோலார் ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்தால் விவசாயிகள் பயன்படுத்தியது போக எஞ்சிய மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமே ஒரு யூனிட் 2.28 ரூபாய்க்கு பெற்று கொள்ளும்.11 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க 5 லட்சம் ரூபாய் செலவாகும்.அதில் 30 சதவீதம் மாநில அரசு, 30 சதவீதம் மத்திய அரசு மானியமாக வழங்கும். எஞ்சிய 40 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக இருக்கும். வங்கிக்கடன் பெறவும் வசதி செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

    ×