search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட் விபத்து"

    • கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் இன்று காலை பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

    கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த குடும்பத்தை சேர்ந்த என்ஜினீயரான ஒருவர் செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் காயத்துடன் தப்பினார்.

    • கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார்.
    • ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பொகோரோ:

    ஜார்க்கண்ட் மாநிலம் பொகோரா மாவட்டம், போஜுதிஹ் ரெயில் நிலையம் அருகே சந்தால்டிஹ் ரெயில்வே கிராசிங் உள்ளது. நேற்று மாலையில் அந்த வழித்தடத்தில் டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங் மூடப்பட்டது. ரெயில் வந்துகொண்டிருந்தசமயத்தில், அந்த கிராசிங்கின் கேட்டில் ஒரு டிராக்டர் திடீரென மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரெயில் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    ரெயில்வே கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார். அந்த டிராக்டர், ரெயில்வே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நிகழ்ந்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்று சரக்கு ரெயில் மீது மோதியது. இதன் காரணமான தடம்புரண்ட ரெயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சிதறி விழ, அந்த பாதையில் வந்த மற்றொரு விரைவு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
    • இதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

    ×