என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jharkhand Accident"
- கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் இன்று காலை பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த குடும்பத்தை சேர்ந்த என்ஜினீயரான ஒருவர் செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் காயத்துடன் தப்பினார்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
- இதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.