என் மலர்
நீங்கள் தேடியது "நோட்டு-புத்தகம்"
- மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார்.
மதுரை
ெபருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை மற்றும் நாடார் மகளிர் அணி சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். பெரியசாமி நாடார், தேவதாஸ் நாடார், காசி–ராஜன் நாடார், ராஜம்மாள் முன்னிலை வகித்தனர்.
ஜான்கென்னடி, பாக்கியலட்சுமி, கோகிலா வரவேற்றனர். குட்டி என்ற அந்தோணி ராஜ், செலின், பிரியா ஆகியோர் துவக்க உரையாற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் மைக்கேல்ராஜ், துணைத்தலைவர்கள் பெரியசாமி நாடார், ஜான்கென்னடி, செயலா–ளர் மோகன், துணை செயலாளர்கள் குட்டி என்ற அந்தோணி ராஜ், ஜான்சன், பொருளாளர் வேளாங்கண்ணி, ஆலோசகர்கள்தேவதாஸ் நாடார், காசிராஜன் நாடார், பிரபாகரன் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.






