என் மலர்
நீங்கள் தேடியது "கிராமியத்திருவிழா"
- பாப்பாபட்டியில் கிராமியத்திருவிழா நடந்தது.
- தலைமைப்பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாப்பட்டி கிராமத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் சார்பில் கிராமிய திருவிழா நடந்தது.
தலைமைப்பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 95 சுய உதவி குழுக்களுக்கு ரூ.4.87 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டன. 75 பேருக்கு கறவை மாடுகள் வாங்க கடனாக தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.90 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விவசாய முதலீடு சார்ந்த தவணைக்கடன் ரூ.1.36 கோடி வழங்கப்பட்டது .
மேலும் பாப்பாப்பட்டி கிராம மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களின் உபயோகத்திற்கென 5 கணினிகள் வழங்கப்பட்டன. கிராம மக்களின் பயன்பாட்டுக்காக ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் பொருத்தப்பட்டது.
ஏறத்தாழ 20 சுற்று வட்டார கிராமங்கள் பயன்பெறு வகையில் தானியங்கி பணமெடுக்கும் எந்திரம் (ஏ.டி.எம்.) நிறுவப்பட்டது. பாரம்பரியக்கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கரகாட்டம், சிலம்பம் மற்றும் பறை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் மோகனபிரபு, பாப்பாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வாலாந்தூ ர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, வாலாந்தூர் எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் சின்ன பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






