என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை"

    • விஜயன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் மூங்கில்பாடி அருகே உள்ள சேனைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 53). இவர் தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மினி டெம்போ வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் விஜயன் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் ரோந்து பணி.
    • டிரைவர் தப்பி ஓட்டம்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமம் கள்ளியூர் பகுதியில் பொக்ந்திலைன் எந்திரம் மூலம் பள்ளம் தோன்றி டிப்பர் லாரியில் மண் கடத்துவதாக திருப்பத்தூர் சப்-லெக்டருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சப்-கலெக்டர் லட்சுமி உத்தரவின்படி நாட்டறம்பள்ளி தாசில்தார் (பொறுப்பு) சுமதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் நந்தினி கொத்தூர் கிராமம் நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்துறையினர் கள்ளியூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தி கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து டிரைவர்கள் தப்பி ஓடினர்.

    இதனையடுத்து மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் அதிகாரிகள் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×