என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஆறுதல்"

    • விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தர விட்டுள்ளார் என்றார்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே முத்தூர் சாலை, வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும், கொடுமுடியில் இருந்து வந்த வேனும் மோதியதில் 4பேர் பலியாகினர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் காங்கயம், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

    அப்போது அவர் கூறுகையில்,விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி (வயது50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்றார்.

    • அமைச்சர் பொன்முடி பேட்டி : மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்பட தேவை இல்லை - நேரில் சந்தித்து ஆறுதல்
    • மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்பட தேவையில்லை. தோல்விதான் வெற்றிக்கான முதல் படியாகும் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வெளியான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில்தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் 5பேர் தற்கொலைக்கு முயன்றனர்.இவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உடனடி மறு தேர்வு எழுதிஉயர்கல்வியை தொடரலாம் என மாணவ,மாணவிகளுக்கு நம்பிக்கையளித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்பட தேவையில்லை. தோல்விதான் வெற்றிக்கான முதல் படியாகும் . இம் மாத இறுதியில் மறுதேர்வு தேதி அறிவிக்கப்படும் .அடுத்தமாதம் நடைபெறும் தேர்விற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியில் சேரலாம். வரும் ஆகஸ்ட் மாதம் வரை உயர்கல்வியில் சேர அரசு அனைத்து கல்லுாரிகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்டகலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்எல்.ஏ.க்கள்புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்ஜெயச்சந்திரன், தாசில்தார்கள் இளவரசன், ஆனந்தகுமார், துணை முதல்வர் சங்கீதா, நிலையமருத்துவ அலுவலர், சாந்தி , உதவி நிலையமருத்துவ அலுவலர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை ,பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம்,துணை தலைவர் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை ,வேம்பி ரவி, நகர செயலாளர் நைனா முகமது , ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி, எத்திராசன்உட்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர் .

    ×