search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister condoles"

    • விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தர விட்டுள்ளார் என்றார்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே முத்தூர் சாலை, வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும், கொடுமுடியில் இருந்து வந்த வேனும் மோதியதில் 4பேர் பலியாகினர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் காங்கயம், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

    அப்போது அவர் கூறுகையில்,விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி (வயது50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்றார்.

    ×