என் மலர்
நீங்கள் தேடியது "நடத்தையில் சந்தேகம்"
- மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி மாவட்டம், புவனகிரி அடுத்த அடகுதூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றார். சங்கர் கூலி வேலையும், மஞ்சுளா வீடுகளில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு நடந்தது. விரக்தி அடைந்த மஞ்சுளா கடந்த 14-ந் தேதி ஐதராபாத் அனுபுரத்தில் உள்ள தனது சகோதரி ராணி வீட்டிற்கு வந்தார்.
சங்கரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை தேடி ராணி வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்து இனி நான் மனைவியை தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதி அளித்தார்.
நேற்று காலை ராணி அவரது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றனர். வீட்டில் சங்கர் மஞ்சுளா அவரது குழந்தைகள் இருந்தனர்.
இரவு 11 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்த சங்கர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.
சிறிது நேரத்தில் மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சங்கர் கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு தப்பி சென்றார்.
காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஞ்சுளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
- கணவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
- போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி, ஜூன்.17-
அருமனையை அடுத்த அண்டுகோடு, ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் கிஷோர். கார் டிரைவர்.
இவரது மனைவி சகி (வயது 42). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். மனைவியின் நடத்தையில் கிஷோருக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சகியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சகி, தனது மகளுடன் வீட்டில் உள்ள ஒருஅறையில் தனியாக படுப்பது வழக்கம்.
வழக்கம் போல நேற்றிரவும் சகி வீட்டில் உள்ள தனி அறையில் படுக்க சென்றார். அவருடன் மகளும் தூங்கினார். இன்று அதிகாலை இவர்களின் அறையில் இருந்து கரும்புகை வந்தது.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அங்கு சகி தீயில் கருகி பிணமாக கிடந்தார்.
சகியின் மகள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் அருமனை போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சகியின் சாவுக்கு காரணம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






