என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர் வைத்திலிங்கம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தான் என்பது மெஜாரிட்டி தொண்டர்களின் ஒருமித்த விருப்பம்.
    • ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேற இரட்டை தலைமையின் கீழ் தொடர்ந்து கட்சி நடத்தி பலப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.‌

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மாலைமலர் நாளிதழக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தான் என்பது மெஜாரிட்டி தொண்டர்களின் ஒருமித்த விருப்பம். ஒற்றை தலைமை என்பது கட்சியை பிளவுபடுத்தும். அ.தி.மு.க. வில் கொண்டு வரப்படும் தீர்மானம் எதுவாக இருந்தாலும் 2 பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் அது அங்கீகரிக்கப்படும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    அப்படி இருக்கையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது தேவையில்லாதது. கட்சிக்குள் பிளவு ஏற்படுவது மட்டுமின்றி தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும்.

    ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேற இரட்டை தலைமையின் கீழ் தொடர்ந்து கட்சி நடத்தி பலப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வர வேண்டும். அதுதான் நாம் ஜெயலலிதாவுக்கு செய்யும் நன்றிக்கடன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×