என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opportunity to join as a member"

    • ஊட்டி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    ஊட்டி, ஜூன்.11-

    நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பத்தை ஊட்டி நீதிமன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் போக்குவரத்துத்துறை, தபால், சுகாதாரத்துறை, கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

    மேலும் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, ஊட்டி-643001 என்ற முகவரிக்கு தபால் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×