என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டம்- ஒழுங்கு"

    குழந்தை கடத்தல் சம்பவத்தில் சட்டம்- ஒழுங்கை போலீசார் சரியான முறையில் கையாளவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதற்காக தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது. யூகத்தின் பேரில் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவதும் சரியானது அல்ல.

    சட்டத்தை யாரும் தன் கையில் எடுக்க கூடாது அது தவறு. எதனால் இது நடைபெறுகிறது என்றால் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சட்டத்தை கையில் எடுப்பதாக கருத வேண்டி உள்ளது.

    மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும் அளவுக்கு போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

    வட மாநிலத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். அவர்களுக்கு மொழி பிரச்சனை இருக்கலாம். அதனால் காரணம் இன்றி தாக்கக் கூடாது.

    காவல் துறை மீதும், அரசு மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கின்றனர். இதை தவிர்க்க வட மாநிலத்தவர் விவகாரத்தில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்த பிரச்சனையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது. அதை முறையாக கையாளவில்லை.

    குழந்தை கடத்தல் பீதியில் படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி

    வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி இருப்பவர்கள் பற்றிய முழு விவரமும் போலீசாரிடம் இருக்க வேண்டும். என்ன வேலைக்காக வந்துள்ளனர். எங்கு தங்கி உள்ளனர். அவர்களது பின்னணி போன்ற முழுமையான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் கையாள முடியும்.

    ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டதையொட்டி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதாக கூறினாலும் அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுக்க கூடாது.

    எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெளிமாநிலத்தில் சென்று தேர்வு எழுதிய பிரச்சனை குறித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேட்டில் மத்திய அரசை சாடி கடுமையான விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    ×