என் மலர்
நீங்கள் தேடியது "தவளக்குப்பம் விபத்து"
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜாராமன்(வயது65), சிலம்பாட்ட வீரர். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். இடையார்பாளையம் தனியார் கம்பெனி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜாராமன் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜாராமனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை ராஜாராமன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுநகர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி குப்பம்மாள் (70).
சம்பவத்தன்று இவர் தவளக்குப்பம் மார்க் கெட்டுக்கு வந்தார். அங்கு பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்ப தயாரானார். அப்போது பலத்த மழை மற்றும் சூறை காற்று காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் குப்பம்மாள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குப்பம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட குப்பம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை குப்பம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






