என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமாசலம்"

    நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும் ஆந்திராவில் உள்ள சிமாசலம் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். #Suriya #Karthi #Simhachalam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம்` கடைக்குட்டி சிங்கம்'. இதில், கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். விவசாயத்தை பெருமைபடுத்தும் படமாக இது உருவாகிறது. இப்படம் தெலுங்கி ‘சின்ன பாபு’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று ஆந்திராவில் நடக்க இருக்கிறது.

    இதற்காக சூர்யா, கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் அங்கு சென்றுள்ளனர். ஆந்திராவில் பிரபலமான சிமாசலம் வராக லட்சுமி நரசிம்ம கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்கள். 



    தமிழில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’, தெலுங்கு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×