என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா-அயர்லாந்து"
அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெறுவது இங்கிலாந்து தொடருக்கான நம்பிக்கையை கொடுக்கும் என ரோகித் தெரிவித்துள்ளார். #IREvIND #RohitSharma
இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 61 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் தவான் 45 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய அயர்லாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெறும் வெற்றி இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை கொடுக்கும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான சவாலான தொடர் எங்களுக்கு காத்திருக்கிறது. ஆகையால், இது ஒரு நல்ல தயார் நிலையாக இருக்கும். அயர்லாந்துக்கு எதிராக 2-வது போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அந்த வெற்றி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 3-ந்தேதி தொடங்குகிறது.

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
டுப்ளின்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் தொடர் வருகிற 3-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டுப்ளின் நகரில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது.
இரு அணிகளும் 2009-ம் ஆண்டு நாட்டிங்காமில் மோதிய ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணி வீரர்கள் விவரம்:- இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ரெய்னா, டோனி, தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், பும்ரா, சித்தார்த் கவூல், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், ராகுல்.
அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பால்பிரின், வில்லியம் போர்ட்டர் பீல்டு, கெவின் ஓபிரையன், ஜேம்ஸ் ஷனான், ஷிமிசிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன், ரேன்கின், ஸ்டூவர்ட் பாய்ன்டர், மெக்பிரின், ஜோசுவா லிட்டில், டாக்ரெல், பீட்டர் சேஸ்