என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராட்டிய மந்திரி"

    வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் என மராட்டிய மந்திரி ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார். #NiravModi #RamdasKadam #PNBScam #MehulChoksi
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக், முருட் ஆகிய கடலோர பகுதிகளில் கட்டப்பட்டு இருக்கும் சட்டவிரோத பங்களாக்களை அகற்ற மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.



    இது குறித்து மராட்டிய மந்திரி ராம்தாஸ் கதம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    அலிபாக் பகுதியில் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 121 பங்களாக்களும், முருட் பகுதியில் 151 பங்களாக்களும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளன. அதை அகற்றுவதற்கு சிலர் மாவட்ட கோர்ட்டுகளில் தடை உத்தரவு பெற்று உள்ளனர்.

    எனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாற்றப்படும். அங்கு 3 மாதங்களுக்குள் நல்ல தீர்வு காணப்படும். அதன் பிறகு அங்குள்ள சட்டவிரோத பங்களாக்கள் அகற்றப்படும். நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் பங்களாக்களை அமலாக்க பிரிவிடம் தகவல் தெரிவித்து இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #NiravModi #RamdasKadam #PNBScam #MehulChoksi
    ×