என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்"

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிப்ரஸ் பல்கேரியா மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு 8 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் முதல் நாடாக 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சிப்ரஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

    இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பகேரியா செல்லும் அவர், இந்த பயணத்தில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

    பயணத்தின் மூன்றாம் கட்டமாக 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செக் குடியரசு நாட்டிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார். #PresidentRamNathKovind
    அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியரசுத்தலைவரிடம் இன்று எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். #AssamNRC #RamNathKovind
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் இறுதி வரைவு அறிக்கையில், 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் இந்த 40 லட்சம் பேரும் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் இந்தியர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் இன்று மனு அளித்தனர். #AssamNRC #RamNathKovind
    ×