என் மலர்
நீங்கள் தேடியது "பைக் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி"
சாத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகன் சண்முகசுந்தரம் (35). இவர் சிவகாசியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாத்தூர் ஓடைப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோதியதில் சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார்.
அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகில் உள்ள கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் உச்சி மாகாளி (38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சகுந்தலா (34) என்ற மனைவியும், முகேஷ் (9) என்ற மகனும், ஹரினி (7) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று உச்சிமாகாளியு,ம், படலையார்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவன்பாண்டி (38) யும் கோவில் கொடை விழாவிற்கு ஆடு வாங்குவதற்காக பைக்கில் சேரன்மகாதேவி நோக்கி சென்றார். பத்மநேரி ரோட்டில் சென்ற போது எதிரில் களக்காடு நோக்கி வந்து கொண்டிருந்த அழகப்ப புரத்தை சேர்ந்த கண்னன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும், உச்சிமாகாளி சென்ற பைக்கும் மோதியது.
இதில் உச்சிமாகாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற சுடலையாண்டி மற்றொரு பைக்கை ஓட்டி வந்த அழகப்பபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






