என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண் அடித்து கொலை"
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் பூஜா (வயது 21).
இவருக்கும், போளூர் பொத்தரை பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பச்சையப்பன் கட்டுமான சாரம் கட்டும் தொழிலாளி. இந்த நிலையில், இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர். பச்சையப்பனின் கள்ளக்காதல் விவகாரம், மனைவி பூஜாவிற்கு தெரிய வந்தது. தகாத உறவை விடும்படி கணவனை வற்புறுத்தினார். எனினும் கள்ளக்காதலியுடன் பச்சையப்பன் தொடர்பில் இருந்தார். மனைவி மீது வெறுப்படைந்தார்.
இதனால் பச்சைப்பன், பூஜாவின் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.
நள்ளிரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலிக்காக வெறிப்பிடித்ததை போல் மாறிய பச்சையப்பன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
இதில், படுகாயமடைந்த பூஜா வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள், பச்சையப்பன் சம்பவ இடத்தில் இருந்து ஓடி விட்டார். பூஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்று காலை பூஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பச்சையப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னரசன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரும், செல்லப்பெருமாள் பேட்டையை சேர்ந்த சுந்தரேசன் மகள் நிவேதாவும் (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பொன்னரசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், விரக்தி அடைந்த நிவேதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
இதனைக்கண்ட பொன்னரசனின் தாய் செந்தமிழ்செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நிவேதாவின் தந்தை சுந்தரேசன் லாஸ்பேட்டை போலீசில் வரதட்சணை கொடுமையால் தனது மகளை பொன்னரசன் அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.






